தெரிந்துகொள்வோம் - PAN CARD.
PAN CARD இது PERMANENT ACCOUNT NUMBER CARD என்பதின் சுருக்கமாகும். அதினை நிரந்தர கணக்கு எண் என தமிழில் பொருள் கொள்ளலாம்...
இதை வழங்குவது யார்?
இந்த நிரந்தர கணக்கு எண்ணை இந்திய வருமானத்துறை வழங்குகிறது....
நிரந்தர கணக்கு எண்ணை எப்படி கண்டுபிடிப்பது?
PERMANENT ACCOUNT NUMBER ஆனது முதல் ஐந்து எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்களும் அடுத்து நான்கு எண்களும் பிறகு கடைசியாக ஒரு ஆங்கில எழுத்துமாக இருக்கும்.... உதாரணம்: AAQPF 1568 R
மேலும் ஐந்தாவதாக வரும் ஆங்கில எழுத்தும் அட்டையின் உரிமையாளர் பெயரின் முதல் எழுத்தும் ஒன்றாக இருக்கும்... உதாரணம்: இதில் ஐந்தாவதாய் வரும் F யில் தான் இந்த எண்ணின் உரிமையாளர் பெயரும் துவங்கும்...
ஒருவர் எத்தனை நிரந்தர கணக்கு எண்ணை வைத்துக்கொள்ளலாம்?
ஒன்று மட்டுமே... இரண்டாவதாக மற்றொன்றை விண்ணப்பித்தாலோ, வைத்திருந்தாலோ அது சட்ட விரோதம்....
ஒருவர் நிரந்தர கணக்கு எண் அட்டையை வைத்திருந்தால் கட்டாயமாக வருமான வரி கட்ட வேண்டுமா?
இல்லை.
இதன் மற்ற உபயோகங்கள்..?
வங்கிகளில் ரூபாய் ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிமாற்றம் செய்யும் போது வங்கி அதிகாரிகள் உங்களின் நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயம் கேட்பார்கள்...
மேலும் இந்த அட்டையில் உங்கள் பெயர், பிறந்ததேதி, புகைப்படம், உங்கள் கையொப்பம் ஆகியவை இருப்பதால் இதனை தேவைப்படும் இடங்களில் ஒரு அடையாள அட்டையாக பயன்படுத்திக்கொள்ளலாம். வாக்கு சாவடிகளிலும் கூட இதனை ஒரு அடையாள அட்டையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதனை முகவரி சான்றாக பயன்படுத்தலாமா?
முடியாது... ஏனென்றால் இந்த அட்டையில் நமது முகவரிக்கான தகவல் ஏதும் இருக்காது...
எத்தனை வருடத்திற்கு ஒருமுறை இதை புதுப்பிக்க வேண்டும்?
கட்டாயமில்லை... அட்டை பழுதடைந்தாலோ, அல்லது தொலைந்து போனாலோ மட்டுமே நீங்கள் விண்ணப்பிக்கலாம். அப்போது மறவாமல் உங்களின் பழைய எண்ணை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடவேண்டும்...
இதை எப்படி பெற்றுக்கொள்ளுவது?
விபரங்கள் http://www.utiitsl.com/pan/ என்கிற இந்த இணைய தளத்தில் கிடைக்கும்... நூறு ரூபாய்க்கும் குறைவாகவே இந்த அட்டையை விண்ணப்பிக்கும் கட்டணம் இருக்கும் என தெரிகிறது..

Badr Zaman
0 Comments