35th Book Fair Chennai




35வது புத்தக கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது. 

புத்தக கண்காட்சி வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தக் புத்தகக் காட்சி நடக்கிறது. 

ன்று மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார் புத்தக் காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.
புத்தக ண்காட்சியில் 682 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வார நாள்களில் பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் காட்சி நடைபெறும்.

ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி புத்தகங்களும் காட்சியில் விற்பனைக்கு உள்ளன. சிறுவர்களுக்கான புத்தக அரங்குகளும் அதிக அளவில் அமைக்கப்பட்டு உள்ளன.

புத்தகக் காட்சிக்கான நுழைவு கட்டணம் ரூ.5.
12
வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி உண்டு. 
மாற்றுத் திறனாளிகள் புத்தகக் காட்சியை சுற்றி வருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
புத்தகக் காட்சியில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு உரை அரங்கம் நடைபெற உள்ளது. 

ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், 8ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், 9ஆம் தேதி தமிழருவி மணியன், 10ஆம் தேதி இயக்குநர் அமீர், 11ஆம் தேதி தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.

Badr Zaman

Post a Comment

0 Comments