நரேந்திரமோடியையும், அவரது தலைமையிலான அரசையும் ஒவ்வொரு பிரச்சினையிலும் வெளுத்து வாங்கி வருகிறன நீதிமன்றங்கள். நீதிமன்றங்களின் கண்டனங்களுக்கு கூடுதலாக இலக்கானவர் என்ற பரிசையே மோடிக்கு வழங்கலாம். ஆனாலும் மோடியின் ஆட்சியில் குஜராத் இந்தியாவின் முதன் மாநிலமாக திகழ்கிறது என்ற வாதம் சங்பரிவார சக்திகளால் முன் வைக்கப்படுகிறது. உணமியில் குஜராத் இந்தியாவில் ஒரே ஒரு விசயத்தில் முதலிடத்தில் இருப்பது உண்மைதான். அது எதுவென்றால், முஸ்லிம் மக்களை கருவறுக்கும் விசயமாகும். மற்றபடி மாநிலத்தின் வளர்ச்சியில் முன்னேற்றம் என்ற இவர்களின் இந்த வாதம் சரியா? மோடியின் திறமையால் குஜராத் முதல் மாநிலமாக திகழ்கிறதா? இதன் உண்மை நிலை என்ன என்பதை 'விடுதலை' நாளேடு புள்ளிவிவரத்துடன் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகளை நன்றியுடன் கீழே தருகிறோம். ''மோடி அளவுக்கு சிறுபான்மை மக்களை வேட்டையாடுபவர்கள் இந்துத்துவ வெறியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார்களே! கோவில்களில் ஆட்டுக் கிடாவைப் பலியிடுவது போல, கோழிகளின் கழுத்தைத் திருகிப் போடுவதைப்போல அல்லவா இஸ்லாமிய மக்களை ஆயிரக்கணக்கில் குரூரமான முறையில் கொன்று குவித்து அவர்களின் ரத்த ஆற்றில் நீந்தித் திளைத்தார்.இப்படி ஓர் ஆள் கிடைத்தால் பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புதானே! அதனால்தான் மோடிக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார் சோ. துக்ளக் இதழில் குஜராத் மாநிலத்தில் பாலாறும், தேனாறும் பாய்கிறது என்று தொடர் கட்டுரைகளை எழுதிடச் செய்துள்ளார். குஜராத் போல நல்லாட்சி இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் நரேந்திரமோடியை இந்தியாவின் பிரதமராக்குங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்து வருகிறார். அப்படிப் பார்த்தாலும் அவர் கூறுவதாவது உண்மையா என்றால் அதுதான் இல்லை; எல்லாம் வெத்து வேட்டு இட்டுக் கட்டிச் சொல்லப்படும் தகவல்கள்.
இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம்தான், இந்தியாவில் நல்லாட்சி நடக்கும் மாநிலமாம், மக்கள் வளமாக வாழும் மாநிலமாம். சோ கூட்டம் புளுகுகிறது - மயக்க மிட்டாய்க் கொடுக்கிறது - பொது மக்களே ஏமாறாதீர்! கவனம்! கவனம்!! |
With Love
Badr Zaman
0 Comments