புற்றுநோயை வருமுன் காக்க சில குறிப்புகள்.


Top of Form
புற்றுநோயை வருமுன் காக்க சில குறிப்புகள்.


நான் சரியான டயட்டில் தான் இருக்கிறேன் எனக்கு ஏன் கேன்சர் வருது என்று கூட நினைக்கலாம், அனைவருக்கும் கேன்சர் நோயை உண்டாக்கும் செல்கள் இருக்கதான் செய்யும். அது சிலரை இல்ல இப்ப பலரை நிறையவே தாக்கி கொண்டு இருக்கிறது. அனைவருமே இதில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

40 வயதை கடக்கும் போது புற்றுநோய்க்கான முழு பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒருவரை புற்றுதாக்கிவிட்டால் பரம்பரை பரம்பரையாக வரவும் வாய்ப்பிருக்கு. ஆகையால் கூடுதல் கனவம் கொள்ளுங்கள்

வாயில் பிளந்து பிளந்து கொப்புளங்கள். இருந்தாலும் கவனம் கொள்ளவேண்டும். வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் கொப்புளம் வரும். அதுவும் நாளடைவில் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு.
தலை வலியோ, வயிற்று புண், வயிற்று வலி , நெஞ்ரிச்சல், வாயு பிரச்சனை இதுபோல் இரண்டு முன்று மாதத்துக்கு மேல் சரியாகாமல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும். ஏதும் தீராத வயிற்று வலி , வாய் புண் கொப்புளங்கள், நீண்ட நாள் வலியில்லாமல் ஆறாத கட்டி மற்றும் புண்கள் இருந்தால் அடிக்கடி மயக்கமாக இருந்தாலும் என்ஸ்கோபி மற்றும் மெமோகிராம் டெஸ்ட்போன்ற மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளை முறையாக எடுத்து கொள்ளுங்கள்


கரிஞ்ச தீஞ்ச உணவும் கேன்ஸர் வருவதற்கு ஒரு காரணமாம். அதிக வெப்பத்தில் (க்ரில், பார்பெக்யூ, எண்ணெயை கொதிக்கவைத்து பொரிப்பது, அடுப்பு எப்பவும் பெரிய தீயில் வைத்துச் சமைப்பது...போன்றதும் கேன்ஸருக்குக் காரணம்...

கவனமாக தீயின் தனலை சமையலுக்கு ஏற்றவாறு வைத்து சமைக்கவும்., சமைக்கும் போது அதிக புகை போக அதை நுகர்ந்துகொண்டு சமைக்காதீர்கள் காற்றோட்டமாக ஜன்னலை திறந்து வைத்துகொள்ளுங்கள் அல்லது எக்ஜாஸ்ட் பேன் போட்டு கொள்ளுங்கள். 

கர்பவாய், மார்பகபுற்றுநோயில் இருந்து பாதுகாப்பு பெற

பெண்கள் ஆடைகள் விஷியத்தில் விலையுயர்ந்த பட்டு புடவைகள் , சுடிதார் எனறு துணிகளை விலை அதிகமாக கொடுத்து வாங்குகின்றனர். ஆனால் யாரும் உள்ளாடையில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நல்ல தரமான பருத்தி (காட்டன்) உள்ளாடைகள் பார்த்து வாங்க வேண்டும். உள்ளாடையை ஆறு மாதம் ஒரு முறை மாற்றுவது நல்லது. புதிய உள்ளாடைகள் வாங்கினாலும் ஒரு முறை அலசி பயன்படுத்துவது நல்லது. (இதை யாரும் செய்வதில்லை).துவைக்கும் போது கொஞ்சம தண்ணீரில் சோப்பு போடு அதில் கொதிக்கிற வெண்ணீரை ஊற்றி அதில் ஊறவைத்து அலசவும். இப்படி செய்வதால் அதில் உள்ள தொற்று கிருமிகள் அழிந்துவிடும். கருப்பு நிற உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும்.இறுக்கமான உள்ளாடைகள் வாங்குவதையும் தவிர்க்கவும். இதனால் கூட தோல்பாதிப்பு நாள்பட ஆறாத புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


பெண்கள் மாதவிலக்கின் போதும் உள்ளடைகளை துப்பரவாக வெண்ணீரில் அலசி பயன் படுத்தவும். வாஙகும் சானிடரி பேட் களும் எக்ஸ்பேரி டேட் பார்த்து வாங்கி பயன்படுத்தவும். இல்லை என்றால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் அப்படி அலர்ஜிக்கு தேங்காய் எண்ணை பயன்படுத்துவது சிறந்ததாகும்.


தற்போது புடவை கட்டினாலும் கேன்சர் வருகின்றது என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரொம்ப இருக்கமாக அழுத்தி டைட்டாக பெட்டிகோட் அணிவதை தவிர்த்து கொள்ளுங்கள். புண்ணாகி அதுவே கேன்சர் கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கு. சிலவிடயங்கள் முறையாக பின்பற்றினாலே தொற்று கிருமிகள் அண்டாமல் கர்பவாய் புற்றுநோயில் இருந்துபாதுகாப்பு பெறலாம்.


புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் கவலை படாதீர்கள் அப்படியே இப்ப கீமோ, ரேடியேஷன், ஆப்ரேஷன் என செய்து இருந்தால் பொலியுஷன் நிறைந்த இடத்துக்கு போகாதீர்கள், அது உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கும். அதே போல் சமைக்கும் போது அதிக புகையில் நிற்காதீர்கள். நிறைய ஆட்கள் இருக்கும் இடத்திற்கு போகாதீர்கள்.ஊதுபத்தி, சாம்ராணி புகை இருக்கும் இடத்தில் அந்த புகையை நுகர்ந்து கொண்டு இருக்காதீர்கள். தன்னம்பிக்கையோடு தைரியமாக முறையாக சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள்.


இப்போதுஎங்கு யாரை பார்த்தாலும் என்னன்னு கேட்டாலே கேன்சர் தான். கடந்த ஆறு ஏழு வருடங்களாக சந்திக்கும் நிறைய பேர் (எப்படியும் 20 பேருக்கு மேல்) கேன்சர் இதில் பலர் இறந்திருக்கிறார்கள் சிலர் புற்றை வென்றும் இருக்கிறார்கள்.
Bottom of Form
With Love

Badr Zaman

Post a Comment

0 Comments