இஸ்ரேலால் ஈரான் மீது தாக்குதல் நடத்த முடியுமா? இருவரினதும் பலம் என்ன? ஒரு இராணுவ ரீதியான ஆய்வு.


இஸ்ரேலால் ஈரான் மீது போர் தொடுப்பது சாத்தியமா ?
இதுதான் இன்றைய உடனடி பதில் காண முடியாத புதிர்
ஏற்கனவே 1981 இல் ஈராக்கிய அணு நிலைகளையும் 2007 இல் சிரியாவின் அணு நிலைகளையும் முளையிலேயே கிள்ளி எரிந்துஇஸ்ரேல் கொஞ்சம் நின்று யோசிப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை
இஸ்ரேல் தனது இராணுவ வல்லமையை காட்ட ஈரான் பலம் குறைந்த நாடும் இல்லை,ஈரானால் இஸ்ரேல் சப்பித்துப்பபடாமல் இருக்க இஸ்ரேல் பெரிய நாடும் இல்லை
சரி என்னதான் நடக்கும்
நடப்பது என்னவோ ஈரான் விவகாரத்தில் கொஞ்சம் நல்லதாகத்தான் இருக்கிறது
அமெரிக்கா,மேற்கு நாடுகள்,என்று அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் உள்ள காலத்தில்தான் இஸ்ரேல் ஈரான் மீது வாலை ஆட்டி சேட்டை பண்ணிக்கொண்டிருக்கிறது. பிரிட்டன் தலையை நுழைத்து வாலை எடுக்க முடியாதபடி தவிக்கிறது.காரணம் ,ஆண்டாண்டு காலமாக கட்டிய ஒலிம்பிக் கனவு இந்த வருடம் நனவாகும் போது இஸ்ரேல் தயிர் ஆக முன் சட்டியை உடைத்து விடுமோ என்ற பயத்தில் இது நல்ல தருணம் இல்லை என்று சுய நலமாக புரூடா விட்டுகொண்டிருக்கிறது .
பிரிட்டன் மட்டுமல்ல ,ஒரு யுத்தத்தின் களைப்பு தீர்ந்து கை காலை நீட்டி அலுப்பு எடுக்க முன்னர் அடுத்ததா …? என்று அமெரிக்காவும் சளைத்துள்ள போதும் தேர்தல் வருவதால் இஸ்ரேலை பகைத்து தம் தலையில் மண்ணை அள்ளிக்கொட்டவும் விருப்பம் இல்லாமல் இஸ்ரேல் இழுத்த இழுவைக்கெல்லாம்ஆமாம்போட்டுகொண்டிருக்கிறது அமெரிக்கா.
சரி இஸ்ரேலால ஈரானை தாக்கும் பலம் உள்ளதா …?
 தாக்க வேண்டும் என்றால் இஸ்ரேலிய விமானங்கள் சுமார் 1000 மைல்கள் பறக்க வேண்டியிருக்கும் நூற்றுக்கணக்கான  விமானங்களை தொடர்ச்சியாக அனுப்பி தாக்க வேண்டும். வானத்தில் இருந்தே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டியிருக்கும்(air fueling )
1981 ஆமா ஆண்டில் ஈராக்கின் ஒசிறாக் அணு நிலைகளையும் 2007 இல் சிரிய அணு நிலைகளை தாக்கியது போன்று ஈரான் விடயத்தில் இஸ்ரேலுக்கு இலகுவாக இருக்காது என்றும் அது மிகவும் சிக்கலானது என்றும் 1991 ஆம் ஆண்டிலும் 2001 ஆம் ஆண்டிலும் வளைகுடா யுத்தத்தின் உயர் விமான தளபதியாக இருந்த லெப்டினென்ட் ஜெனெரல் டேவிட் ஏடுப்டுலா கூறியுள்ளார்


ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது என்பது கடினமான ஓன்று என்று அமெரிக்க இராணுவ தளபதி மாட்டின் .டெம்சி கூறியுள்ளார் .
ஈரான் மீதான தாக்குதல் நடத்தத் இது உரிய தருணம் அல்ல என்றும் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் பிரிட்டிஷ் வெளி நாட்டமைச்சர் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்
ஈரானிடம் உள்ளது உலகுக்கு தெரிந்த அளவில் நான்கு அணு நிலையங்கள்.
நடான்ஸ் ,போர்டோ ,அறக் ,இஸ்பகான் ஆகியனவே அவை.
நடான்ஸ் அணு நிலையம் 30 அடி ஆழத்தில் 2 .5 மீட்டர் தடிப்புடைய கொன்க்ரீட் சுவர்களை கொண்ட 25 ஆயிரம் மீட்டர் கொண்ட இரு அறைகளுடனான அணு நிலையம் . போர்டோ அணு நிலையம் மலைகளை குடைந்து அதன் அடியே அமைக்கப்பட்டுள்ள அணு நிலையம்.
ஏற்கனவே சிரியா ஈராக் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலால் படித்த பாடத்தால் ,அனுபவத்தால் கட்டப்பட்ட அணு நிலைகள்தான் இவை.
சரி இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்
"கை விட்டு எண்ணக்கூடிய விமானங்களை வைத்துக்கொண்டு ஈரான் மீது தாக்குதல் நடத்துவது என்பது சாத்தியப்படாது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறுகிறார் முன்னாள் அமெரிக்க இராணுவ தலைமையாக அதிகாரியும் ,ராண்ட் விமான கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருமான அன்றூ ஆர் ஹோகன்
"ஈரானை தாக்கும் திறன் இஸ்ரேலுக்கு இல்லை.இதற்கு காரணம் இரு நாடுகளுக்குமிடையேயான தூரம் " என்று சி யின் முன்னாள் பணிப்பாளர் மைக்கல் வீ ஹய்டேன் கூறுகிறார்
இவர்களின் கருத்து இவ்வாறு இருக்க ,அப்படி இஸ்ரேல் ஈரானை தாக்குமாக இருந்தால் மூன்று வழிகளால் இஸ்ரேலிய விமானங்கள் பயணிக்க முடியும் ஒன்றில் துருக்கி ஊடான வட பகுதியால் அல்லது சவூதி அரேபியா ஊடாக தெற்கால் அல்லது ஈராக் ,ஜோர்டான் ஊடக மத்திய பகுதியால். இவற்றில் மத்திய பகுதியாக வருவதே அதிக சாத்தியம் உள்ளது .ஏனெனின் தூரம் குறைந்த பகுதி இதுதான்
இஸ்ரேலிடம் உள்ள விமானங்கள் இதற்கு போதுமானவையா என்றால் அதிலும் சந்தேகம்தான் தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள்.இஸ்ரேலிடம் 125  அமெரிக்க f -15 I ரக F -16 I ரக விமானங்கள் உள்ளன.அவை 2000  மைல்கள் தொடர்ந்து சராசரியாக பயணிக்கும் ஆற்றல் மட்டும் தான் கொண்டவை



அதிலும் உயரமாக பறக்கும் போது அல்லது கூடிய நிறையுள்ள குண்டுகளை சுமக்கும் போது குறைவான மைல்களே பயணிக்க முடியும் .அத்துடன் இஸ்ரேலிடம் உள்ள வான் மூலமான எரிபொருள் நிரப்பும் திறன் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது .அமெரிக்கவாவின் தயாரிப்பான k c  707 ரக எரிபொருள் தாங்கி விமானங்கள் எட்டு மாத்திமே உள்ளன.
எரிபொருள் நிரப்பும் விமானம் ஓன்று ஒன்றுக்கு மேற்பட்ட யுத்த விமானங்களால் வானத்தில் பாதுககப்பட வேண்டியிருக்கும்.ஏனெனில் வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் போது எதிரிகளின் ஏவுகணை,மற்றும் விமான தாக்குதல்கள் இடம் பெறுவதாலேயே இது அவசியமானதாகும்.
அதேபோல எரிபொருள் நிரப்பும் தாங்கி விமானம் 5000  அடியில் பறக்கும் அதே வேளை,யுத்த விமானங்கள் பதிவான உயரத்திலேயே பறக்கின்றன.இதன் காரணமாக எரிபொருள் நிரப்பும் தாங்கி விமானம் பதிவான உயரத்துக்கு இறங்க வேண்டியிருக்கும் ,அப்போது ஈரானின் ஏவுகணை தாக்குதல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் .
ஈரானின் வான் பாதுகாப்பு இன்னமும் அமெரிக்காவாலோ மேற்கு நாடுகளாலேயோ பரீட்சிகப்பட்டிருக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஆளில்லாத அதி நவீன விமானம் ஒன்றை சேதம் எதுவும் இன்றி தரையிறக்கிய ஈரானிய வான் பாதுகாப்பு இஸ்ரேலை மட்டுமல்ல அமெரிக்காவையும் கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது

அதனால் தானோ என்னவோ இஸ்ரேலுக்கு அமெரிகவிடம் உள்ள 30 ஆயிரம் இறாத்தல் எடை கொண்ட 200  GBU -31 ரக பங்கர் பஸ்டர் குண்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வேர்ஜிநியாவின் முன்னாள் ஜனநாயக கட்சி செனட்டர் சார்ல்ஸ் எப் .வால்டும் அமெரிக்க கொள்கை நிலைய சார்ல்ஸ் எஸ் ரோப்பும் அண்மையில் கேட்டுள்ளனர் .
இஸ்ரேலிடம் உள்ள GBU -28  ரக பங்கர் பஸ்டர் குண்டுகள் 5000 இறாத்தல் நிறை கொண்டவை .அவை ஈரானிய நிலத்தடி அணு நிலைகளை தாக்கும் திறன் அற்றவை .அமெரிக்காவிடம் உள்ள GBU -31  ரக பங்கர் பஸ்டர் குண்டுகள் கூட ஈரானிய அணு நிலைகளை தகர்க்குமா என்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது
ஈரானிடம் உள்ள பல்வேறு வகையான ஏவுகணைகள் இஸ்ரேலிய விமானங்களுக்கு இலகுவான பயணத்தை கொடுக்கப்போவதில்லை.நிச்சயம் ஈரானிய ஏவுகணைகளும் விமானக்களும் இஸ்ரேலிய விமானிகளை சுற்றி ஓட வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே இஸ்ரேலுக்கு இப்போதுள்ள நிலையில் பயணம் செய்யும் தூரத்தில் இருந்து கொண்டு ஈரானை தாக்குவது என்பது வெற்றி பெற வைக்காது.அதனால்தான் அமெரிக்காவும் இந்த தாக்குதலில் பின் வாங்கிக்கொண்டிருகிறது
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இலவு காத்த கிளிகளாக அமெரிக்காவும் இஸ்ரேலும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன.
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஓன்று ஏற்ப்படுமானால் அரபுக்கள் சந்தோசப்படுவதை விட அமெரிக்காவும் இஸ்ரேலும் சந்தோசப்படுவதுதான் அதிகமாக இருக்கும். ஏனெனில் ஈரானை தாக்க அதன் பக்கத்து வீட்டின் மடியில் இடம் கிடைக்கும் .அது ஈரான் மீதான தாக்குதல் வெற்றி பெறுவதில் கூடிய சாத்தியத்தை கொடுக்கும்
ஈரான் மீது தனியே தன்னால் தாக்குதல் நடத்த முடியாது என்று அறிந்து வைத்துள்ள இஸ்ரேல் ,தாக்குதல் ஓன்று நடைபெறும் போது அமெரிக்காவை அதில் இழுத்து போடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இஸ்ரேல் இழுக்கிறதோ இல்லையோ அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலுக்கு சவரம் செய்யும் அரசியல் வாதிகள் அமெரிக்காவை இழுத்து போடுவார்கள். அமெரிக்காவிடம் இருக்கும் ஆயுதங்களையும்,குண்டுகளையும் வைத்து பல வாரங்களாக தாக்குதல் நடத்தினாலே ஈரான் மீதான தாக்குதலில் வெற்றி பெற முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள்.அதிலும் அவ்வாறான தொடர்ச்சியான தாக்குதலால் ஈரானின் அணு வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாதிருக்கும் என்று அவர்கள் கூறுகின்றார்கள்
நடக்கும் விடயங்களை கூட்டி கழித்து பார்க்கும் போது ஈரான் மீதான தாக்குதல் நடைபெறுமாக இருந்தால் அது சிரியாவில் ஆட்சி மாற்றம் நடந்த பின்னர்தான் நடக்கும் என்ற உண்மை மட்டும் புலப்படுகிறது
With Love
Badr Zaman

Post a Comment

0 Comments