ரேஷன் அட்டை புதுப்பித்தல்: மார்ச் 31 வரை நீட்டிப்பு!


சென்னை: ரேஷன் அட்டைகளை, இணையதளம் மூலம் புதுப்பிக்க, மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

தமிழக அரசின் செய்திக் குறிப்பு: ரேஷன் கடைகளில், குடும்ப அட்டை புதுப்பிப்புக்கான கால நீட்டிப்பு, நேற்றுடன் முடிந்த நிலையில், மேலும், கால நீட்டிப்பு வேண்டும் என, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதை பரிசீலித்த முதல்வர், மேலும் ஒரு மாத காலத்துக்கு, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின்படி;* இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள, வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர்.
* அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள, உடல் நலக் குறைவால் நடக்க இயலாதோர், வயது முதிர்வடைந்தவர்.
* புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டவர்கள்.

* தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில்http://210.212.62.90:8080/ newfcp/card validity.do என்ற இணையதள முகவரிக்குச் சென்று, புதுப்பித்துக் கொள்ளலாம்.


நாளை முதல் செயல்பாடு:

இதில், ரேஷன் பொருட்கள் வேண்டுவோர், 2012ம் ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்து, ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டியும், மற்றொரு நகலை கடைக்காரரிடம் அளித்தும், ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.ரேஷன் பொருட்கள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்திருப்பவர்கள், இணையதளத்தில் உள்ள, 2012ம் ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை, அவர்களது குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.

இந்த இணையதள வசதி, மார்ச் 1 முதல், 31ம் தேதி வரை செயல்படும்.

பாக்ஸ் - பேட்டி வடிவில்

குடும்ப அட்டை புதுப்பிப்பு பணி, நேற்றுடன் முடிந்த நிலையில், 1.86 கோடி ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப் பட்டுள்ளன. கடந்தாண்டு ஜூன் 1ம் தேதி முதல், இம்மாதம் 27ம் தேதி வரை, ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக, 6,743 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.- காமராஜ், தமிழக உணவுத் துறை அமைச்சர்.

*மேற்கண்ட இணையதளத்தை சரியாக (தமிழில் பார்ப்பதற்கு) இந்த தமிழ் எழுத்துருவை டவுன்லோட் செய்து உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்:  

*தமிழ் எழுத்துரு டவுன்லோட் செய்ய:  http://210.212.62.90:8080/newfcp/font/ltetramya.ttf 
With Love 

Badr Zaman

Post a Comment

0 Comments