எஸ்.எம்.எஸ்ஸில் பரிசு விழுந்ததாகக் கூறி மதுரையில் ரூ.5 லட்சம் மோசடி...
மதுரையில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு 7 லட்சம் பவுண்டு லாட்டரியில் விழுந்துள்ளதாகக் கூறி எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.
இந்தத் தொகையைப் பெற வேண்டுமானால், அதற்கு கட்டணத் தொகையாக ரூ.5,10,399 செலுத்த வேண்டும் என்றும், அதற்கு சில ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும் என்றும் கூறி ஒரு பெண் அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். அதை நம்பிய மாணவர் மூன்று தவணையாக ரூ.5,10,399 ஐக் கொடுத்துள்ளார்.
ஆனால் அதன்பிறகு எந்தத் தகவலும் அவருக்கு வரவில்லை. இதனால் தான் நன்றாக ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த மாணவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் புகாரைப் பதிவு செய்து அவரை ஏமாற்றிய நபர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே இதுபோன்ற எஸ்.எம்.எஸ்.கள் அதிகம் மதுரை நகரில் பரவுவதாகவும், எனவே யாரும் இதுகுறித்து நம்பவேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

With Love
Badr Zaman
0 Comments