· பிறப்பு&இறப்பு சான்றிதழ் இணைய தளத்தில் பெறலாம்
சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் பிறப்பு&இறப்பு சான்றிதழ்களை இணைய தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிறப்பு & இறப்பு சான்றிதழ்கள் அந்தந்த பகுதிகளிலுள்ள மண்டல அலுவலகங்களிலேயே பொது மக்கள் இலவசமாக பெற்று வருகின்றனர். இது தவிர சென்னை மாநகராட்சி இணைய தளத்தில் (http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthanddeath.htm) இருந்தும் இந்த சான்றிதழ்களை இலவசமாக பதிவு இறக்கம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இப்படி பதிவு இறக்கம் செய்து எடுக்கப்படும் சான்றிதழுக்கு வேறு எந்த அத்தசாட்சியும் தேவையில்லை. மேலும், சென்னையை விரிவாக்கம் செய்து திருவொற்றியூர், ஆலந்தூர் உள்ளிட்ட 42 உள்ளாட்சி அமைப்புகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளிலும் 1.1.2012 முதல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு&இறப்பு சான்றிதழ்கள் 6.1.2012 முதல் மாநகராட்சியின் இணைய தளத்தில் பதிவு இறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, இணைக்கப்பட்ட பகுதிகளில் 1.1.2012க்கு முன்பு பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு&இறப்பு விவரங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த பணி முடிந்த பிறகு விரைவில் இணைய தளத்தில் மேற்படி சான்றிதழ்களை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

With Love
Badr Zaman
0 Comments