வருகிறது 109.............




வருகிறது 109.............

அரசின் புதிய திட்டம் : இறந்தவர்களின் உடலை இலவசமாக கொண்டு செல்லும் சேவை 

தமிழகம் முழுவதும் இறந்தவர்களின் உடலை இலவசமாக கொண்டு செல்ல, "109' என்ற புதிய ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும், கடந்த தி.மு.., ஆட்சி காலத்தில், உயிர் காக்கும் உன்னத சேவை திட்டம் என்ற பெயரில், "108' ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. விபத்து, மாரடைப்பு, பிரசவம் உள்ளிட்ட உயிர் காக்கும் அனைத்து உதவிக்கும், "108' என்ற டெலிபோன் எண் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக, அதிநவீன முதலுதவி கருவிகளுடனும், 400க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன. மாவட்டத்தின் பரப்பளவை கொண்டு, தலா, 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அளிக்கப்பட்டன. 

"108'
ல் பணியாற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பால், இத்திட்டம் மக்கள் மனதில் தனியிடம் பிடித்தது. நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும், "108' ஆம்புலன்ஸ் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. 

தற்போது, அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்சையும், "108'ல் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அவசர சிகிக்சை தேவைப்படுவோருக்கு, "108' ஆம்புலன்ஸ் இயங்குவது போல், மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல, இலவச ஆம்புலன்ஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த உதவி வேண்டுவோருக்காக, "109' என்ற இலவச டெலிபோன் எண்ணை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
 With Love
 Badr Zaman

Post a Comment

0 Comments